திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கரந்தானை, செஞ்சடை மேல் கங்கை வெள்ளம்;
கனல் ஆடு திருமேனி, கமலத்தோன் தன்
சிரம் தாங்கு கையானை; தேவதேவை; திகழ்
ஒளியை; தன் அடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை; மண் ஆய், விண் ஆய்,
மறிகடல் ஆய், மால் விசும்பு ஆய், மற்றும் ஆகி,
பரந்தானை; பள்ளியின் முக்கூடலானை;
பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி