திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நல்-தவனை; நால்மறைகள் ஆயினானை;
நல்லானை; நணுகாதார் புரங்கள் மூன்றும்
செற்றவனை; செஞ்சடை மேல்-திங்கள் சூடும்,
திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேய,
கொற்றவனை; கூர் அரவம் பூண்டான் தன்னை;
குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும்
பற்றவனை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே
பாழே நான் உழன்ற ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி