பஞ்சுண்ட மெல் அடியாள் பங்கன் தன்னை;
பாரொடு, நீர், சுடர், படர் காற்று, ஆயினானை;
மஞ்சுண்ட வான் ஆகி, வானம் தன்னில் மதி
ஆகி, மதி சடை மேல் வைத்தான் தன்னை;
நெஞ்சுண்டு என் நினைவு ஆகி நின்றான் தன்னை;
நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க, ஓங்கும்
நஞ்சு உண்டு, தேவர்களுக்கு அமுது ஈந்தானை;
நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.