திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே
முதல் நடுவு முடிவு ஆனானை,
தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை,
திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை,
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை,
அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற
நாவானை, நாவினில் நல் உரை ஆனானை,
நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி