திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கங்கை எனும் கடும் புனலைக் கரந்தான் தன்னை,
கா மரு பூம்பொழில் கச்சிக் கம்பன் தன்னை,
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை,
ஐயாறு மேயானை, ஆரூரானை,
பங்கம் இலா அடியார்க்குப் பரிந்தான் தன்னை,
பரிதிநியமத்தானை, பாசூரானை,
சங்கரனை, தலையாலங்காடன் தன்னை,
சாராதே சால நாள் போக்கினேனே!.

பொருள்

குரலிசை
காணொளி