விடை ஏறிக் கடைதோறும் பலி கொள்வானை,
வீரட்டம் மேயானை, வெண் நீற்றானை,
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை,
முன்னானை, பின்னானை, அந் நாளானை,
உடை ஆடை உரி-தோலே உகந்தான் தன்னை,
உமை இருந்த பாகத்துள் ஒருவன் தன்னை,
சடையானை, தலையாலங்காடன் தன்னை,
சாராதே சால நாள் போக்கினேனே!.