கடிக்கும்(ம்) அரவால் மலையால் அமரர் கடலைக் கடைய, “எழு காளகூடம்
ஒடிக்கும்(ம்), உலகங்களை” என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர்; உமிழீர்
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு, அருவி இருபாலும் ஓடி, இரைக்கும் திரைக் கை
அடிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!