“அன்னையே!” என்னேன்; “அத்தனே!” என்னேன்; “அடிகளே அமையும்” என்று இருந்தேன்;
என்னையும், “ஒருவன் உளன்” என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்;
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள்
பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .