திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; “உள்ளமே அமையும்” என்று இருந்தேன்;
செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர்,
அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பெற்ற போது உகந்து, பெறாவிடில் இகழில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

பொருள்

குரலிசை
காணொளி