திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

அருமணியை, முத்தினை, ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை, அருமறையின் பொருளை,
திருமணியை, தீம் கரும்பின் ஊறல் இருந் தேனை, தெரிவு அரிய மா மணியை, திகழ் தகு செம் பொன்னை,
குருமணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரைவாய்க் கோல்வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரைமேல்,
கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

பொருள்

குரலிசை
காணொளி