திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

திருத் தினைநகர் உறை சேந்தன் அப்பன்(ன்), என் செய்வினை அறுத்திடும் செம்பொனை, அம் பொன்
ஒருத்தனை, அல்லது இங்கு ஆரையும் உணரேன்; உணர்வு பெற்றேன், உய்யும் காரணம் தன்னால்;
விருத்தனை, பாலனை, கனவு இடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன்;
கருத்தனை, நிருத்தம் செய் காலனை, வேலைக் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

பொருள்

குரலிசை
காணொளி