திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

“குண்டலம் குழை திகழ் காதனே!” என்றும், “கொடு மழுவாள் படைக் குழகனே!” என்றும்,
“வண்டு அலம்பும் மலர்க் கொன்றையன்!” என்றும், வாய் வெருவித் தொழுதேன், விதியாலே;
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்று ஆய், பசுபதி பதி வினவி, பலநாளும்,
கண்டல் அம் கழிக் கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .

பொருள்

குரலிசை
காணொளி