பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே! பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ! தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள் ஆதியே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!