திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக்
கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து,
நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே

பொருள்

குரலிசை
காணொளி