திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை, வனிதை பாகனை, வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
குழகனை, அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன துருவமா குவரே.

பொருள்

குரலிசை
காணொளி