பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சிவாய நம எனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமை அது ஆக்கிச் சிவாய சிவ சிவ என்று என்றே சிந்தை அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே.
செஞ் சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம் அஞ்சணவும் முறை ஏறி வழிக் கொண்டு துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை நெஞ்சு என நீங்கா நிலை பெறல் ஆகுமே.
அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும் எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது சங்கை கெட்ட அவ் எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அரும் கலம் ஆமே.
நாய் ஓட்டு மந்திரம் நான்மறை வேதம் நாய் ஓட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாய் ஓட்டு மந்திரம் நாதாந்த சோதி நாய் ஓட்டு மந்திரம் நாமறியோம் அன்றே.
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே.