பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அருளும் அரசனும் ஆனையும் தேரும் பொருளும் பிறர் கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின் மருளும் பினையவன் மாதவம் அன்றே.
இயக்கு உறுதிங்கள் இருள் பிழம்பு ஒக்கும் துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கு அற நாடுமின் வானவர் கோனைப் பெயல் கொண்டல் போலப் பெரும் செல்வம் ஆமே.
தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள் உன் உயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது கண் அது கண் ஒளி கண்டு கொளீரே.
ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும் கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பு இடை வைத்திடும் ஓட்டித் துரந்திட்டது வலியார் கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன் மின் ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தைக் கூற்றன் வரும் கால் குதிக்கலும் ஆமே.
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர் மிசைச் செல்லும் கலம் போல் அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடு பேறு ஆகச் சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.
வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந் தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள் மேவும் அதனை விரவு செய்வார் கட்குக் கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே.
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப் பின் காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே.
உடம் பொடு உயிரிடை விட்டோடும் போது அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும் விடும் பரிசு ஆய்நின்ற மெய்ந் நமன் தூதர் சுடும் பரிசத்தையும் சூழ்கிலாரே.