சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன், கற்றசிட் டன்வெந்தொளி
திகழும் பைம்பொடித் தவண்டணி
கவசம் புக்குவைத்(து) அரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றியல்
கரணங் கட்டுதற்(கு) அடுத்துள
களகம் புக்குநற் கவந்தியன்,
அவசம் புத்தியிற் கசிந்துகொ(டு)
அழுகண் டத்துவைத் தளித்தனன்,
அனகன், குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்(து)அடு
பரிசொன் றப்பணிக்கு(ம்) நன்றுமே