திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்(து)
அறியாமைப் பசுதைச் சிறியோரிற் செறியுங்

கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்

பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்

செடிகாயத்(து) உறிகைச் சமண்மூடர்க்(கு) இழவுற்
றதுதேவர்க்(கு) அரிதச் சிவலோகக் கதியே.

பொருள்

குரலிசை
காணொளி