திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடலொடு மேகம் களிறொடும் ஓசை
அட எழும் வீணை அண்டர் அண்டத்துச்
சுடர் மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே.

பொருள்

குரலிசை
காணொளி