திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன்
உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்;
பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? பிறை சேர் சடையாய்! முறையோ? என்று
அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே?

பொருள்

குரலிசை
காணொளி