உரியேன் அல்லேன் உனக்கு அடிமை; உன்னைப் பிரிந்து, இங்கு ஒரு பொழுதும்
தரியேன், நாயேன்; இன்னது என்று அறியேன்; சங்கரா! கருணையினால்
பெரியோன் ஒருவன், கண்டு கொள் என்று, உன் பெய் கழல் அடி காட்டி,
பிரியேன் என்று என்று, அருளிய அருளும் பொய்யோ? எங்கள் பெருமானே!