திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்ல நந்தவனப் பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர்
பல் பணித் தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்
அல்லும் நன் பகலும் திரு அலகிட்டுத் திரு மெழுக்கு அமைப்போர்கள்
எல்லை இல் விளக்கு எரிப்பவர் திரு முறை எழுதுவோர் வாசிப்போர்.

பொருள்

குரலிசை
காணொளி