உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி
அலகில் தொண்டருக்கு அறிவு அளித்துஅவர் திறம் அவனியின் மிசை ஆக்கும்
மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்திக்
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றாம்.