திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடும் நாள்
பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்
கொங்குஆர் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி