திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம்
நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள
நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம்,
தீவினையே.

பொருள்

குரலிசை
காணொளி