"குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய
பொருள்களும் இல,
திணம்" எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை
உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி
உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.