பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ்
பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு
வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.