திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி,
மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர்
புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த
மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும்
வேதவனமே.

பொருள்

குரலிசை
காணொளி