பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு,
அரவினைக்
கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன்
இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு
தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி
வேதவனமே.