திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கார் இயல் மெல் ஓதி நதிமாதை முடி வார் சடையில் வைத்து,
மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடுமாடம்
மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம், ஒண் படகம்,
நாளும் இசையால்,
வேரி மலி வார்குழல் நல் மாதர் இசை பாடல், ஒலி
வேதவனமே.

பொருள்

குரலிசை
காணொளி