கத்திரிகை, துத்திரி, கறங்கு துடி, தக்கையொடு, இடக்கை,
படகம்,
எத்தனை உலப்பு இல் கருவித்திரள் அலம்ப, இமையோர்கள்
பரச,
ஒத்து அற மிதித்து, நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர்
உலகில்
மெய்த் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும்
வேதவனமே.