நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல்
அம்பால்
கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம்
ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.