பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு
தங்கும்
முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம்
ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ
மல்க,
செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு
நலூரே.