பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கருகு புரி மிடறர், கரிகாடர், எரி கை அதனில் ஏந்தி, அருகு வரு கரியின் உரி-அதளர், பட அரவர், இடம் வினவில் முருகு விரி பொழிலின் மணம் நாற, மயில் ஆல, மரம் ஏறித் திருகு சின மந்தி கனி சிந்த, மது வார் திரு நலூரே.