பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு
பிச்சை,
தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்;
கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம்
வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு
நலூரே.