பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம் ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள் வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே.