பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி ஒட்டு இலகு இணை மர வடியினர், உமை உறு வடிவினர், சிட்டு இலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வது ஒர் விட்டு இலகு அழகு ஒளி பெயரவர், உறைவது விளமரே.