திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும்,
முன் இயங்கு
பருதியான் பல்லும், இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்
பயின்று இனிது இருக்கை
விருதின் நால்மறையும், அங்கம் ஓர் ஆறும், வேள்வியும்
வேட்டவர், ஞானம்
கருதினார், உலகில் கருத்து உடையார், சேர் கழுமலநகர்
எனல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி