கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர்
உறைவார்மேல்
ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து
நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக்
கொண்டு
வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு
ஆணையும் நமதே.