பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குண்டனாய்த் தலை பறித்து, குவிமுலையார் நகை காணாது, உழிதர் வேனை- பண்டமாப் படுத்து, என்னைப் பால் தலையில்-தெளித்து, தன் பாதம் காட்டி, தொண்டு எலாம் இசை பாட- தூமுறுவல் அருள் செய்யும் ஆரூரரைப் பண்டு எலாம் அறியாதே,-பனி நீரால் பரவை செயப் பாவித்தேனே!