திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர்
“சோத்தம், எம்பெருமான்!” என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல,
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

பொருள்

குரலிசை
காணொளி