திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை!
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை, பசுபதியை,
“சந்தித்த காலம் அறுத்தும்” என்று எண்ணி இருந்தவர்க்கு
முந்தித் தொழு கழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே.

பொருள்

குரலிசை
காணொளி