பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய், வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடை வேள்வித் தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே?