காடு அலால் கருதாதார்;கடல்நஞ்சு உண்டார்;களிற்று
உரிவை மெய் போர்த்தார்;கலன் அது ஆக;
ஓடு அலால் கருதாதார்;ஒற்றியூரார்;உறு பிணியும்
செறு பகையும் ஒற்றைக் கண்ணால்
பீடு உலாம் தனை செய்வார்;பிடவம், மொந்தை,
குடமுழவம், கொடுகொட்டி, குழலும், ஓங்கப்
பாடலார்;ஆடலார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.