திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மிக்கானை, வெண்நீறு சண்ணித்தானை, விண்டார்
புரம் மூன்றும் வேவ நோக்கி
நக்கானை, நால் மறைகள் பாடினானை, நல்லார்கள்
பேணிப் பரவ நின்ற
தக்கானை, தண் தாமரைமேல் அண்ணல் தலை
கொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம்
புக்கானை, புண்ணியனை, புனிதன் தன்னை, பொய்
இலியை, பூந்துருத்திக் கண்டேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி