திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

புக்கு அடைந்த வேதியற்கு ஆய்க் காலற் காய்ந்த
புண்ணியன் காண்; வெண் நகை வெள்வளையாள் அஞ்ச,
மிக்கு எதிர்ந்த கரி வெருவ, உரித்த கோன் காண்;
வெண்மதியைக் கலை சேர்த்த திண்மையோன் காண்;
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை
ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல்
திக்கு அணைந்து வரு மருங்கில்-திருப் புத்தூரில்-
திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

பொருள்

குரலிசை
காணொளி