திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பற்றவன் காண், ஏனோர்க்கும் வானோருக்கும்;
பராபரன் காண்; தக்கன் தன் வேள்வி செற்ற
கொற்றவன் காண்; கொடுஞ்சினத்தை அடங்கச்
செற்று, ஞானத்தை மேல் மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன் காண்; பிறங்கு அருவிக் கழுக்குன்றத்து
எம் பிஞ்ஞகன் காண்; பேர் எழில் ஆர் காமவேளைச்
செற்றவன் காண் சீர் மருவு திருப் புத்தூரில்-திருத்
தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

பொருள்

குரலிசை
காணொளி