திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கந்த மலர்க் கொன்றை அணி சடையான் தன்னை;
கதிர்விடு மா மணி பிறங்கு கனகச்சோதிச்
சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானை; சராசர
நல்-தாயானை; நாயேன் முன்னைப்
பந்தம் அறுத்து, ஆள் ஆக்கி, பணி கொண்டு,
ஆங்கே பன்னிய நூல்-தமிழ்மாலை பாடுவித்து, என்
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை;
செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி