கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னை, கமலத்தோன்
தலை அரிந்த காபாலி(ய்)யை,
உரு ஆர்ந்த மலை மகள் ஓர் பாகத்தானை, உணர்வு எலாம்
ஆனானை, ஓசை ஆகி
வருவானை, வலஞ்சுழி எம் பெருமான் தன்னை, மறைக்காடும்
ஆவடு தண்துறையும் மேய
திருவானை, தென்பரம்பைக்குடியில் மேய திரு
ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.